search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சாலை தீ விபத்து"

    • தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    • ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த திண்டல் வேலன் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சொந்தமாக பிளக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த பிரிண்டிங் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளன.

    நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிறுவனத்திலிருந்து புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உரிமையாளர் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான சி.என்.சி. மெஷின், அதிநவீன பிரின்டிங் மிஷின், ஏ.சி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து சேதம் அடைந்தன. நல்ல வாய்ப்பாக அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா என தெரிய வில்லை. இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரும்புகையுடன் வெளிவந்த தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ராய்காட்:

    ராய்காட் மாவட்டம் மகாட் எம்.ஐ.டி.சி பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் அங்கிருந்த பொருட்கள் தீயின் வெப்பம் காரணமாக வெடித்து சிதறியது.

    கரும்புகையுடன் வெளிவந்த தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் 10 வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர்.

    தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷடவசமாக யாரும் காயமடையவில்லை எனவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தொழிற்சாலையில் உள்ள 3-வது யூனிட்டில், பிரிவு 6-ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • தீயை அணைப்பதற்குள் அந்த யூனிட்டில் இருந்த பல கோடி மதிப்பிலான அனைத்து உபகரணங்களும் எரிந்து நாசமானது.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அனக்கா பள்ளி மாவட்டம், பரவாடா பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள 3-வது யூனிட்டில், பிரிவு 6-ல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அந்த பகுதி முழுவதும் பரவியது.

    இதில் ரப்பர் குடோனிலும் தீ பற்றியதால் கரும்புகை சூழ்ந்து, அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

    அங்கிருந்த ஒரு சில ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். தீ விபத்து குறித்து அனக்கா பள்ளி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தீயை அணைப்பதற்குள் அந்த யூனிட்டில் இருந்த பல கோடி மதிப்பிலான அனைத்து உபகரணங்களும் எரிந்து நாசமானது.

    தீ முழுவதும் அணைந்த பிறகு தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 4 ஊழியர்கள் அடையாளம் தெரியாத அளவு உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

    5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

    காயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வருமாறு, தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டத்தை சேர்ந்த ராம் பாபு (வயது 32), குண்டூரை சேர்ந்த ராஜேஷ் பாபு (36), சவுடு வாடாவை சேர்ந்த ராமகிருஷ்ணா (28) என தெரியவந்தது.

    மற்றொருவரின் உடல் அடையாளம் தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் அமர்நாத் தெரிவித்தார்.

    தீ விபத்து குறித்து அனக்கா பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று எரிவாயு கசிந்து திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமுற்றனர்.#ChinaFactoryExplosion
    பீஜிங்:

    சீனாவில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில் இன்று காலை தனியார் தொழிற்சாலை ஒன்றில் வழக்கம்போல பணியாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது தொழிற்சாலையில் திரவ எரிவாயு நிரப்பப்பட்டிருந்த டேங்கில் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் கருகி பரிதாபமாக  பலியாகினர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்தனர். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமுற்றனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த விபத்து குறித்து தொழிற்சாலையின் உரிமையாளரை போலீசார் விசாரித்து வருகின்றனர். #ChinaFactoryExplosion

    ×